அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் கால் இறுதி போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்து உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது.


 நெதர்லாந்தை பொறுத்த வரை இந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள அணி. மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஆர்ஜான் ராபனின் காயம் முற்றிலும் குணமடைந்து களம் இறங்கிருந்தார். சுலோவேகியாவுக்கு எதிராக ராபன் ஒரு கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆர்ஜான் ராபன்தான் எங்களின் ஒரே பயம் என்று பிரேசில் பயிற்சியாளர் துங்காவே கூறியது போன்று இன்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.

பிரேசில் அணியின் இளம் வீரர் எலானோ காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. பிரேசில் அணியின் பேபியானோ,காகா போன்ற வீரர்கள் நல்ல பயிற்சியில் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இருப்பினும் 2-1 என தோல்வியை தான் தழுவியது.

Dutch fightback buries Brazil

போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற முதல் கால் இறுதி போட்டியில் ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் ரொபின்கோ பிரேசிலுக்கான முதல் கோலை அடித்து முன்னிலை தேடி கொடுத்தார்.

53ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் பிலிப் மெலோ சேம்சைடு கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் இருந்தது. தொடர்ந்து வெஸ்லி ஸ்னெட்ஜிகர் அடித்த கோலால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கடந்த கால போட்டிகள் ஒரு பார்வை

இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நெதர்லாந்தும் பிரேசிலும் 3 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 2 முறையும் நெதர்லாந்து ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 1974ஆம் ஆண்டு ஜெர்மனியின் நடந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்தும் பிரேசிலும் மோதின.டோர்ட்மன்ட் நகரில் நடந்த இந்த போட்டியில் நெதர்லாந்து 2-0 என்று வெற்றி பெற்றது.

1994ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட கால் இறுதி ஆட்டத்தில் பிரேசிலும் நெதர்லாந்தும் மீண்டும் சந்தித்தன. டல்லாஸ் நகரில் நடந்த இந்த போட்டியில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சரியாக 24 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் மீண்டும் இரு அணிகளும் அரை இறுதியில் மோதின. இந்த போட்டி 1-1 என்று டிராவில் முடிந்தது. டைபிரேக்கரில் பிரேசில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 







Post Comment


1 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.