அதற்கான வழிகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
அறிவை பெருக்கும் விளையாட்டுகள் உங்களுடைய நினைவுத்திறனை கூர்மையாக்கும் அறிவுபூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள்.
உதாரணமாக: செஸ் கேரம்போட் உள்ளிட்ட விளையாட்டுகள் நம்முடைய மூளையை கூர்மையாக்கும்.
இத்தகைய விளையாட்டுகள் உங்களுடைய நினைவுத்திறன் கவனம் ஒரு செயலின் மீது கருத்தை நிலை நிறுத்துதல் போன்ற பலவற்றை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
நன்கு தூங்குங்கள் உங்கள் தூக்கத்தை பொறுத்த நினைவுத்திறன் மாறுபடும்.நீங்கள் போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் அது ஞாபகமறதியை ஏற்படுத்தும்.
அது மட்டுமல்லமால் தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை நீங்கள் பெறமுடியாது.இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.
வெவ்வேறு வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள் ஞாபகமறதி உள்ள மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் பழக்கத்தை மாற்றுங்கள்.வௌ;வேறு இடங்களில் அமர்ந்தோ நடந்து கொண்டோ படியுங்கள்.நீங்கள் மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை அடுத்த நாள் காலையில் மற்றோரு முறை பார்வையிடுவது நல்லது.அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் நன்கு பதியும்.
எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள் ஒரு குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள்.
உதாரணமாக: மொபைல் எண்கள் முக்கியமான திகதிகள் நபர்கள் முக்கியமான காரியங்கள் போன்றவற்றின் குறிப்புகளை எழுதி வையுங்கள்.எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள்.இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.
நினைவூட்டும் தந்திரங்கள் புகைப்படங்கள் வார்த்தைகள் வாக்கியங்கள் ஜோக்குகள் பாடல்கள் இணைப்பு வார்த்தைகள் போன்றவற்றை குறிப்பிட்ட கருவி வார்த்தைகள் வாக்கியங்களில் உள்ள மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இத்தகைய முறைகளை பயன்படுத்தி உங்கள் ஞாபகமறதியை குறைக்கும் நடவடிக்கையை துவங்குங்கள்.
1 comments:
பயனுள்ள பகிர்வு. நன்றீ வாழ்த்துக்கள்
Post a Comment