ஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து சமீபத்தில் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்த இரண்டு மனித மூதாதையர்களும் ஒருபொதுவான மரபு உயிரணு வகையில் இருந்து பிரிந்துள்ளதாக கூறப்படுவதற்கு இந்த அறிக்கைகள் மேலும் வலு சேர்க்கின்றன.
மேலும், மனிதயின பரிணாமம் பல்வேறு கிளைகளாகவும், பல முடிவில்லா வழிகளிலும் உருவானது என பண்புருவாக்கப்பட்ட கண்ணோட்டத்தை இந்த முடிவுகள் ஆதரிக்கின்றன. இது உண்மையானால், பின்னர் குறைந்தபட்சம் 5 மில்லியன் ஆண்டுகளில் வெவ்வேறு காலங்களிலும்,
வெவ்வேறு இடங்களிலும் உயிர் வாழ்ந்த அல்லது உடன் வாழ்ந்த பல மனிதயின தோற்றங்களில் ஹோமோ சேப்பியன்கள் (Homo Sapiens) எனப்படும் நவீனகால மனிதர்கள் தான் இறுதியாக பிழைத்திருக்கும் ஓர் உயிரினமாகிறது. உண்மையில், தற்போதைய சூழலில் ஒரேயொரு மனித உயிரினம் தான் உயிர் வாழ்கிறது. அது ஒரு விதியாக (Rule) அல்லாமல் விதிவிலக்காக இருக்கலாம்.
விஞ்ஞானங்களுக்கான தேசிய ஆணைய (வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆகியோரால் 2008) செயல்திட்டத்தில் விளக்கப்பட்ட இந்த அறிக்கைகளில் முதலாவதானது, ஆதிகால மனிதர்களிடமும், நவீனகால மனிதர்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட 37 மண்டை ஓடு அளவீடுகளில் கண்டறியப்பட்ட வேறுபாடுகளை அடைய எவ்வளவு காலம் மரபணு மாற்றத்திற்கு (அதாவது, மரபணுவில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றங்கள்) தேவைப்படும் என்பதை கணிக்க ஓர் ஆய்வு தேவை என்பதை குறிப்பிடுகிறது. இந்த முதலாவது அறிக்கையின் முடிவுகள், வெறும் 500,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறித்து காட்டுகின்றன. அண்ணளவாக 400,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமான (Fossils) தடயங்களில் தான் முதன்மையாக ஆதிகால மனிதர்கள் காணப்படுகிறார்கள்.
ஆதிகால மனிதர்களுக்கும் மற்றும் நவீனகால மனிதர்களை வார்த்தெடுத்த மரபினர்களுக்கும் மற்றும் பிற மனித உயிரினங்களுக்கும், தற்போது இல்லாமல் அழிந்து போன மரபினங்களுக்கும் ஒரு பொதுவான மூதாதையர்கள் இருக்கலாம் என்று சுமார் 500,000த்திற்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன ஹோமோ ஹெய்டில்பேர்ஜென்ஸிஸ் (Homo heidelbergensis) எனப்படும் மனித இனங்களில் இருந்து எடுக்கப்பட்ட புதைபடிமானங்கள் எடுத்துரைக்கின்றன. உண்மையில் 500,000க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மரபணு உடைவு (அதாவது ஒரு புதிய உயிரினம் தோன்றும் நிகழ்வு) இருந்திருந்தால், நவீன மனித மரபணு தொகுப்பிற்கு ஆதிகால மனிதர்களால் எந்த பங்களிப்பும் செய்திருக்க சாத்தியமில்லை.
இரண்டாவது அறிக்கையானது, குரோசியாவின் (Croatia) குகையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகால மனிதனின் கால் எலும்பில் மேற்கொள்ளப்பட்ட மைட்டோகான்ரியல் மரபணு (Mitochondrial DNA) ஆய்வின் முடிவுகளை விளக்குகிறது. (இதன் ஒரு பகுதி ஆகஸ்டு 8, 2008ல் வெளியான The Guardian இதழில் உள்ளது). மைட்டோகான்ரியல் மரபணு (mtDNA) என்பது கலங்களில் இருக்கும் 'சக்தி உற்பத்தி நிலையங்களான' மைட்டோகான்ரியாவில் மட்டுமே காணப்படும்.
ஒரு பாதி ஓர் தாயிடமும், மற்றொரு பாதி தந்தையிடமிருந்தும் எடுக்கப்படும் நியூக்ளியர்DNAபோலில்லாமல், மைட்டோகான்ரியல் மரபணு தாய்மார்களிடம் இருந்து மட்டுமே அவர்களின் வழிதோன்றலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆதிகால மனிதர்களின் mtDNA, நவீனகால மனிதர்களின் mtDNAவில் இருந்து தெளிவாக மாறுபட்டிருப்பதை ஜேர்மனியின் லைப்சிக் நகரிலுள்ள மக்ஸ்-பிளங்க் மனிதயின பரிணாம ஆய்வு பயிலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில், ஆதிகால மனிதர்களுக்கும், இறுதியில் நவீனகால மனிதர்களை படைத்தளித்த மரபினர்களுக்கும் இடையிலான இடைவெளி அண்ணளவாக 660,000 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம். இந்த 660,000 ஆண்டுகள் என்பது மேற்குறிப்பிட்ட வீவர், ரோஸ்மென் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆய்வில் கணிக்கப்பட்ட காலத்திற்கு மிக அண்மையில் தான் அமைகிறது. காலப்போக்கில் ஆதிகால மனிதர்களின் mtDNAவில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்த ஆராய்ச்சி குறிப்பிடுவதால், இது அந்த உயிரினங்கள் மிக குறுகிய காலங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இட்டு செல்கிறது. ஆதிகால மனிதர்களின் நியூக்ளியர் DNA பற்றிய முழு ஆய்வும் இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், இந்த அறிக்கைகளும் மற்றும் பிற சமீபத்திய ஆய்வு அறிக்கைகளும் நவீனகால மனிதர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் இடையிலான உறவுகள் மீதான எதிர்விவாதங்களுக்கு மேலும் பல புதிய தகவல்களை சேர்த்துள்ளன. கிடைத்திருக்கும் புதைபடிமான தடயங்களின் அடிப்படையில், ஆதிகால மனிதர்கள் மனிதர்களின் தோற்றத்தை கொண்டிருந்தார்கள்; இவர்கள் அண்ணளவாக 400,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, சுமார் 38,000 ஆண்டுகள் முன்னர் வரை ஐரோப்பா மற்றும் மேற்கத்திய ஆசியாவின் பெரும்பகுதிகளில் வாழ்ந்திருந்தனர். பிரமாண்ட எலும்பு வடிவம் மற்றும் பெரிய நெற்றி முகடுகளுடன், தாடை இல்லாமல் (அதாவது, தாடை உள்வாங்கி இருக்கும்) இருந்த குறிப்பிடத்தக்க பல்வேறு உடல் தோற்றக்கூறுகள் தான், இன்று வழக்கத்தில் இல்லாத இந்த 'குகை மனிதர்கள்' பற்றிய பிரபல கருத்துருக்கள்.
தொடக்கத்தில் ஆதிகால மனிதர்களின் புதைபடிமானங்கள் 1856ல் ஜேர்மனியிலுள்ள நியாந்தர் பள்ளத்தாக்கில் (Neander Valley) கண்டுப்பிடிக்கப்பட்டன. அவை, வேறு வகைப்பட்ட மனிதர்களும் பூமியில் ஒருபோது வாழ்ந்திருந்தார்கள் என்பதற்கான முதல் நேரடி ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு, மனிதர்கள் அவர்களின் முந்தைய தோற்றங்களிலிருந்து உருவாகி இருக்கிறார்கள் என்ற புதிய மற்றும் விவாதத்திற்குரிய பல சிந்தனைகள் பின்னர் ஏற்பட அது உதவியது.
மற்றொருபுறம், சுமார் 100,000த்திற்கும் 200,000த்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு முன்னர் முதன்முதலில் ஆப்ரிக்காவில் நவீனகால மனிதர்கள் தோன்றியதாக புதைபடிமான தடயங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர்கள் தொடர்ந்து விரைவாக, நிலப்பரப்பில், அதாவது கிழக்கு மற்றும் மேற்கத்திய நிலப்பகுதிகளில், அவர்களுக்கு முந்தைய மனித உருவங்களை விட மிக தொலைவிற்கு அவர்கள் பரவினார்கள். நவீனகால மனிதர்களுடன் தொடர்புடைய மனிதயின ஆய்வு, முந்தைய அனைத்து மனித உயிரினங்களை விட மிகவும் வளமான ஒரு கலாச்சாரத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது. அதில் நுட்பமான தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி, தனிநபர் அலங்கார பொருட்கள் (அதாவது, நகைகள்) மற்றும் கலை பாவனை (சான்றாக, பனிகால ஐரோப்பாவிற்கு பிந்தைய குகை ஓவியங்கள்) போன்ற கலை உணர்வுகளையும் கொண்டுள்ளது. தெளிவாக, நவீனகால மனிதர்களின் தோற்றம் மனிதயின பரிணாமத்தில் ஓர் உண்மையான அளவுரீதியான பாய்ச்சலை எடுத்துக்காட்டுகிறது.
தொடரும் .....
0 comments:
Post a Comment