அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

பனிக்கட்டி ரகசியம்பூமியில்.. நாம்..!
நம் பூமியில் சுமார் 70 % நீர் உள்ளது. இந்த நீர்தான் உயிர்களின் ஆதாரம். நீரின்றி உயிரில்லை. வட தென் துருவங்களில் பனி உறைந்து போய் கிடக்கிறது.மனிதன் தவிர பிற உயிரின்கள் அந்த வாழ்நிளைக்குத் தகுந்தாற்போல் தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
பனிபாறை இன்றி பனிக்கரடி, பனி சிறுத்தை , பெங்குவின் ,பனி நரிகள் ,சீல், வால்ரஸ் மற்றும் சில பாக்டீரியா வைரஸ்போன்றவைகளுக்கு வாழ்க்கையே இல்லே. இங்குதான் இவைகள் பனிக்கட்டிகளில், அந்த உறைப் பனிக்குளிரை அனுபவித்து, சந்தோஷமாய் விளையாடி வாழும் விலங்கினங்கள்,, ஏராளம், ஏராளம். அந்த விலங்கினங்கள் பற்றி இன்னும் முழுமையாக நமக்குத் தெரியவில்லை.வெப்பத்தை உண்டாக்கி உணவு தயாரித்து பழகிய மனிதனுக்குத்தான் உறைபனியை அனுபவிக்கத் தெரியவில்லை.

பூமி.. யாருக்கு... சொந்தம்..?
உறைபனிப் பாறைகளுக்குள் கோடிக் கணக்கான பூச்சிகள், பாக்டீரிய, மற்றும் வைரஸ், வகைகள் வாழுகின்றன.ஆனால் இவைகளால் தான் வெப்பம் அதிகரித்தால் உயிரோடு இருக்க முடியாது. நம்மால்தான் அங்கு போய் நிம்மதியாய் வாழ முடியாது. நாம் அப்பகுதியைப் பற்றி ஆராய்ச்சி செய்ய , சில காலம் போய் தங்கி பணி செய்யலாம்.இந்த பூமி நமக்கு மட்டும்தான் சொந்தமானதா? நமக்கு முன்பே இப்புவியை தனதாக்கிக் கொண்டு வாழும் உயிரினங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டாமா? நம்மைவிடவாழ்விட சீனியர்கள் அவை. அவை உரிமைப் பிரச்சினை எழுப்பினால் நம் நிலைமை என்ன? ஏதோ பூமி பந்து என்பது நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று நாம் நினைத்து செயல் பட்டுக்கொண்டு இருக்கிறோம்..இது நியாயமா.?41, 000 ஆண்டு காலத்தில். பூமியின் சாய்மானம்அச்சு, கூடி,, குறைகிறது. அதேபோல1,00,000 -4,00,000 ஆண்டு கால சுழற்சியில், பூமியின் சுற்றுப் பாதை, விரிவடைந்து, சுருங்குகிறது. விரியும்போது சுற்றுப் பாதை, நீள்வட்டமாகவும், சுருங்கும்போது, சரியான வட்டமாகவும் இருக்கிறது enpathu,ஆச்சரியமான உண்மையாகும்.

பனிக்கட்டி என்றால் அது உலகை குளிர்ச்சி படுத்திக் கொண்டு இருக்கிறது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அவற்றின் பணி மனிதனைவிட மகத்தானது என தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. பனிப்பாறைகளும், பனிமலைகளும் உள்ளதால்தான், உயிரிகள் உலகின் அங்கமாக வாழுகின்றன. ஆறுகள் வற்றாத ஜீவநதியாய் ஓடி வருவதன் காரணி பனிப்பாறைகளே. உலகம் ஆதவனின் வெப்ப கதிர் வீச்சிலிருந்து உயிரிகளைப் பாதுகாப்பதும் இவைகளே. இப்போது அவற்றிலிருந்து ஆதிகால் உலகின் வெப்பநிலையை, வளிமண்டல நிலையை,மற்றும் கரியுமில வாயுவின் அளவை புட்டு புட்டு வைக்கிறது பனிக்கட்டி துண்டுகள்.. அது மட்டுமா? அதைவிட முக்கியமாக, அப்போது பூமி எவ்வாறு தன் தாயகததை, சூரியனை சுற்றிவருகிறது என்றஇயற்பியல் தகவலையும் தருகிறது என்றால்..நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் இதுதான் உண்மை நண்பா. !


பனிக்கட்டியில்.. சிறைப்பட்ட.. காற்றின்.. கதை.. !
இங்கே உள்ள படத்தைப் பார்க்கிறீர்களா.? இது மிக ஆழத்திலிருந்து, சுமார் 50௦ மீ ஆழத்துக்கு கீழ் பூமியை துளைபோட்டு எடுத்த பனிப்பாறையின் ஒரு சிறு துண்டு. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், a tip of the iceberg . புவிபரப்பின் மேலிருந்து கிழே செல்ல செல்ல அங்குள்ள பனிக்கட்டியில் காணப்படும் காற்றின் அளவு குறைகிறதாம். பூமியின் மேல் படிந்திருக்கும் பனிக்கட்டியில் காற்று ஏராளமாய் கலந்துள்ளது. 15 மீட்டர் ஆழம் வரை இதே கதைதான். ஆனால் அதைவிட ஆழமாக கிழே போகப் போக பனிப்பாறையில் உள்ள காற்றின் அளவு குறைந்து கொண்டே வருகிறதாம்.இந்நிலை 50 மீட்டர் ஆழம் வரைமட்டுமே. அதற்கும் கீழே உள்ள பனிப் பாறையில் இருந்து பனிக்கட்டியை எடுத்துப் பார்த்தால், அது சொல்லும் கதையே வேறாக இருக்கிறது. ஆமாப்பா..இங்கே காற்று பனிக்கட்டிக்குள் சிறைப்பட்டு விட்டது. காற்றுக் குமிழியை சுற்றி பனிக்கட்டிதான்! 


கதை கேளு.., கதை கேளு..!. . 
பூமியின் மேல் படிந்து கிடந்த பனிப்பாறைக் குடைந்து, அதன் ஆழ் மடியில் புதைந்து போன காற்று.. அது வாழ்ந்த காலத்தின் வரலாற்றை மிகத் தெளிவாக.. சொல்லுகிறது. ஒருக்கால் அப்போது பதிவு செய்ய சாதனங்கள் இருந்து பதிவு செய்து வைத்திருந்தால்கூட, அவை இவ்வளவு துல்லியமாக பதிவு செய்திருக்குமோ என்னவோ? சந்தேகம்தான் ஆனால் அத்தனை தெளிவான பதிவு இது. .!
பனிக்கட்டி துண்டு இந்த பனிக்கட்டி துண்டு அண்டார்டிக் பகுதியிலிருந்து எடுத்ததாகும். இவை 500௦௦ ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகின் வளிமண்டல நிலையை தெளிவாகச் சொல்கிறது. அப்போது கரியுமில வாயுவின் அளவு 315 ppm தான் இருந்தது. . ஆனால் இன்று அதன் அளவு.378 ppm .கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 50 ppm கரியுமில வாயுவின் அளவு கூடி இருக்கிறது கடந்த 140 ஆண்டுகளில் ,புதைபடிம எரிபொருள் எரிதலால் , வளிமண்டல கரியுமில வாயுவின் நிலை 100 ppm அதிகரித்துள்ளது. 1800 லிருந்து, இன்றுவரையுள்ள கடந்த 210 ஆண்டுகளில்,1990 கள்தான் அதிகமான வெப்ப பத்தாண்டுகள் என்று தகவல்கள் சொல்லுகின்றன. அதுவும் 1998 ஆம் ஆண்டுதான் அதிக வெப்பமான ஆண்டு என்று சொல்லப் படுகிறது. ஆழத்தில் இருந்து எடுத்த பனிப்பாறையின் சிறு துண்டு, அன்றைய வளிமண்டல் காற்றின் அளவு, அதில் கலந்துள்ள வாயுக்கள் , கரியுமில வாயுவின் அளவு போன்றவற்றை,கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது. 
. 
கரையும் பனிப் பாறை துருவப்பகுதியிலும். .

காணாமல்.. போன.. பனிப் பாறை..  
வடதுருவத்தில் உள்ள ரஷ்யா மற்றும் வடதுருவத்தை மூடியுள்ள பனி உறை , . 1979 ல்இருந்து தொடர்ந்து மிக அதிகமாய் குறைந்து கொண்டே வந்துள்ள விஷயத்தை ஏவுகணை எடுத்துள்ள மிகத் தெளிவாக காட்டுகிறது.அப்போது ரஷயாவுக்கும், வடதுருவத்துக்கும் இடையே பனிப் பரப்பே இருந்துள்ளது. நீர்ப்பரப்பை இம்மியும் காண முடியாது. அப்போது வருடத்துக்கு 9 % பனி மட்டுமே உருகிக்கொண்டு இருந்தது. ஆனால் இப்போது 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஏவுகணையில் படம், 2003 ம் ஆண்டு, கிட்டத்ததட்ட 40 ௦% பனி உறை காணாமல் போய்விட்டது என்ற அதிர்ச்சி தகவலை நமக்கு தெரிவிக்கிறது. . ரஷ்யா அலாஸ்கா, மற்றும் கனடாவைச் சுற்றிலும் ஒரே நீர்ப்பரப்புதான். பனி ஓடியே போய்விட்டது என்பது வருத்தமான் உண்மையே. இது பொய்யேதும் இல்லை. ஏவுகணை எடுத்த படங்கள் சொல்லும், பூமியின் சீதோஷ்ண நிலையின் நிஜக் கதை இது. 


உலகின் மிகப பெரிய பனி பாறை , பெருநாட்டில்உள்ளது. இதன் பெயர் குல்க்கயா.அந்த பனிப் பாறையின்,, கரையும் படம். இது. வருடத்துக்கு 600௦௦ அடி என ௦௦ குறைகிறது. 2100 ம் ஆண்டில் இது இருக்கவே இருக்காது என சூழலியலாளர்கள் நிர்ணயிக்கின்றனர். 

இடம் .. மாறும்.. வடதுருவம்.. !
பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை முதலில் உலகுக்கு தெரிவித்து சிறை தண்டனை அனுபவித்தவர் கலிலியோ கலிலி என்ற இத்தாலிய விஞ்ஞானி. சூரியனை சுற்றும் பூமியின் சுற்று எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையாம். அதனுடைய சுற்றுப்பாதை வான்வெளியில் அவ்வப்போது, ஒரு ஒழுங்கு நியதியில் மாறிக்கொண்டே இருக்கிறதாம். இந்த பாதை என்பது, சூரிய வெப்பத்தால் பூமியின் மேற்பரப்பில் ஏற்ப்பட்ட மாற்றத்தை , முக்கியமாக, அந்தக் கால பனி ஊழிக்காலத்தின் தன்மையையும், வளிமண்டல நிலையையும் தெளிவாகத் தெரிவிக்கிறது. கடந்த 
25, 00 ,000ஆண்டுகளில், ஒவ்வொரு 41, 000 ஆண்டு கால இடைவெளியிலும், குளிர் மற்றும் வெப்ப சுழற்சிகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன என்பதை சொல்லுகின்றன23.5 டிகிரி சாய்வாகச் சுற்றும் பூமி தனது 19,000 -23,000 ஆண்டு காலத்தில், தன பம்பர தலையாட்டத்தில் ,வான்வெளியில் ஒரு சுற்று முடித்து, விடுகிறது. அதனுடைய துருவமும் கூட ( அதன் எல்லை இடம்.. இப்போது, வடதுருவ விண்மீன்..4 ,500௦ ஆண்டுகளுக்கு வடதுருவ விண்மீன் துபேன், இன்னும் 8 ,500 ஆண்டுகளுக்கு பின்பு துருவ விண்மீன் ஆல்டிராபிம் , 15 ,000 ஆண்டுகளுக்குப் பின் இந்த துருவ விண்மீனும் பூமியின், பம்பர சுழற்சியால், மாறி இப்போது லைரா விண்மின் தொகுதியில் உள்ள வேகா அந்த காலத்தின் ,வட துருவ விண்மீனாக இருக்கும்.எப்படி இருக்கு கதை.?. ஏதாவது நம்ப முடிகிறதா.. ஆனால் அதாம்ப்பா உண்மை.. இயற்பியல் சொல்லும் தகவல் இது.வடதுருவத்தில் உள்ள ரஷ்யா மற்றும் வடதுருவத்தை மூடியுள்ள பனி உறை , . 1979 ல்இருந்து தொடர்ந்து மிக அதிகமாய் குறைந்து கொண்டே வந்துள்ள விஷயத்தை ஏவுகணை எடுத்துள்ள மிகத் தெளிவாக காட்டுகிறது.அப்போது ரஷயாவுக்கும், வடதுருவத்துக்கும் இடையே பனிப் பரப்பே இருந்துள்ளது. நீர்ப்பரப்பை இம்மியும் காண முடியாது


ஒரு ..காலத்தில்.. வட்டமாக,.. சுற்றிய..பூமி..!
, அண்டார்டிகாவின்,வோஸ்டாக் நிலையத்திலிருந்து எடுத்த பனிப்பாறையின் உள் அடுக்கு , இந்த உண்மையை தெளிவாக தெரிவிப்பதோடு, அந்த பனி ஊழிக்காலத்தில், கரியுமில வாயுவின் அளவும் மிகக் குறைவாக இருந்ததை காட்டுகிறது. , .அப்போது, சுமார், 4,00, 000 ஆண்டுகளுக்கு முன், கால நிலைஉலகம் முழுவதும் பனி படர்ந்து இருந்தது; வெப்ப நிலை -85 டிகிரிக்கும் கீழ்; கரியு மில வாயுவின் அளவு, 175 ppm . அதே சமயத்தில், பூமியின் சுற்றுப்பாதை இப்போது போல் நீள் வட்டமாக இல்லாமல் , சரியான வட்டமாக இருந்ததாம்.41, 000 ஆண்டு காலத்தில். பூமியின் சாய்மானம்அச்சு, கூடி,, குறைகிறது. அதேபோல1,00,000 -4,00,000 ஆண்டு கால சுழற்சியில், பூமியின் சுற்றுப் பாதை, விரிவடைந்து, சுருங்குகிறது. விரியும்போது சுற்றுப் பாதை, நீள்வட்டமாகவும், சுருங்கும்போது, சரியான வட்டமாகவும் இருக்கிறது enpathu,ஆச்சரியமான உண்மையாகும். எனவே இதன்படி பார்த்தால், நாம் இப்போது பனி ஊழிக்காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கிறோம். ஆனாலும் கூட, இந்த பனி உருகும் நிலை என்பது, வானவியலாளர், நிலவியலாளர் கணிப்பை விட ரொம்பவும் முன்கூட்டியே நிகழ்கிறது. காரணம்.. மனிதனின் செயல்பாடும். அளவுக்கு அதிகமாக எரிக்கப்படும். புதைபடிம எரிபொருள்களான , பெட்ரோல், டீசலும்தான்! ..


நீரின்.. வெப்ப .. கையெழுத்து ,,சுமக்கும்.. உயிரிகள்..
நண்பா அது மட்டுமல்ல துவக்க கால கடல் வாழ் உயிரிகளும் கூட, அந்தக் கால நீர்நிலைகளின் வெப்ப அளவைக் காட்டுகின்றன நண்பா. அதாம்ப்பா. அப்ப வாழ்ந்த, சுமார் 10,00 000, ஆண்டு களுக்கு முன், கடலின் தரையில் ஊர்ந்து திரிந்த பொராமினிபெரன் என்ற ஒரு செல் உயிரி அன்றைய, நீரின் வெப்ப கையெழுத்தை வைத்திருக்கிறதாம். அதுமட்டுமல்ல, அப்போது பூத்து குலுங்கிய தாவரங்களின், மகரந்தங்கள் கூட, அந்த கால வெப்ப நிலையின் குறியீடுகளாய் உள்ளன. இங்கே காணப்படும் ஓரிகோன் என்ற செடியின் மகரந்தம் 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதுவும் அப்போதிருந்த சீதோஷ்ண நிலையைக் காட்டுகிறது. 


வெப்ப உயர்வால்.. சுருங்கும் குளிர்காலமும் .. நீளும் கோடையும்.!.
நாம் காட்டையும், புதைபடிம பொருள்களையும் காலி செய்து கொண்டே வருவதால், இயல்பாய் நிகழும் வெப்ப உயர்வைவிட , மிக அதிகமாய் பூமி சூடாகி, கொதித்துக் கொண்டு இருக்கிறது.2010 ம் ஆண்டு, இந்த மே மாதம் தான்,இதுவரை இருந்த ஆண்டுகளை விட உலகின் அதிக வெப்பமான மாதமாம். வடதுருவ குளிர் உப்பு நீர உள்ளே அமுங்குவதால், இப்பகுதியின், வட அட்லாண்டிக் கடல், தெற்கிலிருந்து சூடான நீரை உள் நோக்கி இழுக்கிறது. கரைந்த ஆர்டிக் ஐஸ் அட்லாண்டிக் பகுதியில் வேகமாக, .உள்ளே நுழைந்து, இப்புவியின், கடலின் நீர் சுழற்சி வேகத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது.ஐரோப்பா உலகின் மற்ற பகுதிகளை விட, அதிகமாக வெப்பத்தை உணரும். அது மட்டுமல்ல நண்பரே.. உலகின் பருவ காலங்கள், மாற்றப் படுகின்றன. குளிர் காலம் குறைகிறது. கோடை நீளுகிறது. 


வெப்பத்தால்.. பாலினம்.. மாறும்.. ஆமைகள்,, மற்றும் உயிரிகள்..!
பொதுவாக, உயிரிகளின் பாலினம், அவைகள் கருவாக உருக்கொள்ளும்போதுதான் உண்டாகிறது. ஆனாலும் கூட அவற்றில் சில உயிரிகளுக்கு, வெப்பமும்( ஊர்வன), சில உயிரிகளுக்கு உணவும்(தேனீக்கள், கரையான்கள்,).கூட பாலினத்தை நிர்ணயம் செய்வது வியப்பான நிஜமாகும். எனவே. இந்த புவி வெப்ப உயர்வால், ஆமைகளின் முட்டையிலிருந்து வரும் குஞ்சுகள், பெரும்பாலும். பெண்ணினமாகவே உள்ளன. ஆச்சரியம்.. ஆனால் உண்மையே. மரங்களின் குறுக்கு உள்ள ஆண்டு வளையம் தான் அப்போது இருந்த புவியின் கால நிலையை, முக்கியமாக வறட்சியா, வளமான காலமா என்பதை சொல்லும் என்றனர் விஞ்ஞானிகள்.ஆனால் இப்போது, கடலின் ஓரத்தில் இருக்கும் பவளப் பாறைகளும் கூட, அவற்றின் குறுக்கேயும் கூட, மரங்களைப் போலவே, வருட வளையங்கள் உள்ளனவாம். அவையும் அக்கால சீதோஷ்ண நிலையைத் தெளிவாகக் கூறுகிறதாம்.நெதர்லாந்தின் காட்டுக்கு கூடு கட்ட, தன இனத்தை விரிவாக்க, குஞ்சு பொரிக்க, வலசை செல்லும் பறவைகள், ரெண்டு வாரம் முன்னமேயே போகிறதாம். காரணம் என்ன தெரியுமா.? அப்போதுதான் அவைகளுக்கு உணவான வண்ணத்துப் பூச்சிகள் கிடைக்கும். அவையும் சூடு தாங்காமல் விரைவில் முட்டையிட்டு, கம்பளிப் பூச்சியாய் மாறுவது தான். இதன் காரணம். இதுதான், இங்கே மதுரையிலும் கூட நிகழ்கிறது. ஒரு உயிரின் வாழ்க்கை நிலை மற்ற உயிரையைச் சார்ந்தே உள்ளது என்ற உண்மையின் நிலைபாடே. இது
புவி வெப்ப உயர்வால், ஆமைகளின் முட்டையிலிருந்து வரும் குஞ்சுகள், பெரும்பாலும். பெண்ணினமாகவே உள்ளன

யார் ..குற்றாவாளி..? . 
இவை அனைத்துக்கும் காரணம் கடந்த 6 ,50 ,000 ஆண்டுகளாக இருந்ததைவிட, கடந்த 10௦௦ ஆண்டுகளில் கரியுமில வாயுவின் அளவு அளவுக்கு அதிகரித்ததின் விளைவே இது. காலநிலை மாற்றத்தின் அடிப்படைஇயற்பியல்.மனிதன் தூண்டியதா. ?...இயற்கையிலேயே இந்த பாதிப்புகளா?20௦ம் நூற்றாண்டின் வெப்ப உயர்வு.. சூரிய கதிர்வீச்சாலா ..?•
கரியுமில வாயுவின் உயர்வு,வளிமண்டலத்தின் அடிப்பகுதியை ...வெப்பமாகவும். அடுக்கு மண்டலத்தை குளிராகவும் ஆக்குகிறது 
கசக்கும் உண்மைகள்..!
• கடல் மட்டம் உயர்ந்தால்.!.!. 4 இன்ச்உயர்ந்தால் தென் பகுதி தீவுகள் காணாமல் போகும். 
• நாம் எவ்வளவு கரியுமிலவாயு, மற்றும் பிற பசுமை அக வாயுக்களை வெளி இடுகிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல், கடல்மட்டம். உயரும்.
• உலகின் பணக்கார நாடுகள் கக்கிய வெப்பம் ,ஏழை நாடுகளால் சுமக்கப்படுகின்றன. •
• உலகின் 80 சத கார்பன் வெளியே ற்றத்திற்கு 20௦ சத மக்களே பொறுப்பு 
• ஓரளவு காலநிலை மாற்றத்தை மட்டுமே அவர்களால் தாங்கமுடியும் 
• 80௦ சத வளிமண்டல சேதத்திற்கு 20 சதம் மக்கள் பொறுப்பு 
• ஆனால் இந்த சிறிய காலநிலை மாற்றத்தை கையாள முடியாத நிலை அவர்களுக்கு !
• தெளிவாக, வடக்கு தெற்கு பிரிவினை.. வளத்திலும், பாதிப்பிலும்.. வாழ்க்கை முறையிலும் பாதிப்பு தெற்கு ப பகுதிக்கும் ஏழைகளுக்குமே.•


• உலக வெப்பம் 2 டிகிரியைத் தாண்டினால்... விளைவுகள்..
• ஆப்பிரிக்கா:30௦௦-60௦ கோடி மக்கள் நீர்ப் போதாமையால்/நீர் போட்டியால் பாதிப்பு அடைவர். 
• 2050 ல் விவசாய உற்பத்தி பாதியாக குறையும். 
• வரண்ட பகுதிகள்.. 8 % மாக உயரும்.
• சஹாராவை ஒட்டியுள்ள இனங்கள், சுமார், 10 % அழியும் நிலைக்கு தள்ளப்படும்.
• ஆசியா.: இங்கு 100௦௦ கோடிப்பேர், நீர் பற்றாக் குறையால் அவதிப்படுவார்கள். 
• இமயமலையின் பனியாறுகள் உருகி வழியும் •
• இந்தியாவில், சோளமும், நெல்லும் 5 % உற்பத்தி குறையும்.
• சீனாவில் அரிசி 12 % குறையும்.
• கடற்கரையில் வெள்ளம் புரண்டோடும்.
• ஐரோப்பா: வெப்பத்தால் கொதிக்கும். 
• 50 %கோதுமை உற்பத்தி அதிகம். வடக்கில் 25 % நீர் பற்றாக் குறை.உண்டாகும். 
• வெப்ப அலைகளால் காட்டு தீ. உருவாகும்.
• மோசமான் காலநிலையால், வெள்ளம் அடிக்கடி.வரும். 
• புதிய நோய்களின் வரவு வேகமாய் நிகழும்.Post Comment


1 comments:

sivatharisan said...

பனிக்கட்டி பற்றிய அரிய தகவல்களை ஒன்று சேர்த்து அறிய தந்தமைக்கு நன்றிகள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.