விடுமுறையைக் கழிக்க அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷைர் கடற்கரைக்கு சமீபத்தில் வந்திருந்தனர் சில சுற்றுலா பயணிகள்.
கடல்நீரில் கால் வைத்த சிறிது நேரத்திலேயே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அய்யோ... அம்மா... என் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தங்களுக்கு என்ன நேரிட்டது என்பதை அவர்களால் உணரமுடியவில்லை. தங்களைச்சுற்றி நீரில் மீன் உள்ளிட்ட எந்த கடல் வாழ் உயிரினமும் கூட இல்லை. ஆனால் ஒரு வித தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டார்கள். அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இறந்த ஜெல்லி மீனின் விஷத் தன்மையுள்ள கொடுக்குகள்தான், இதற்கு காரணம் என்பது பின்னர் கண்டறியப்பட்டது. பின்னர் அவை அகற்றப்பட்டு கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், ÔÔஜெல்லி மீன் இறந்த பிறகும் அதன் கொடுக்குகள் நீரில் சிதறி காலப்போக்கில் அழியும் தன்மை உடையவை. உடனடியாக அவற்றில் உள்ள விஷத்தன்மை குறையாது. அவை பல நுண்ணிய அளவுகளில் சிதைந்து விடும். இருப்பினும் அவற்றின் விஷத் தன்மையின் வீரியம் குறையாது.
0 comments:
Post a Comment