கடலுக்குள் உள்ள டைட்டானிக் கப்பலின் உதிரி பாகங்களின் இப்போதைய நிலைய 3டி படமெடுப்பதற்கு நிபுணர் குழுவினர் 20 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
R.M.S .டைட்டானிக் இன்க் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் தன்து முதல் பயணத்தின்போது கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி பனிபாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1522 பேர் உயிரிழந்தனர்.உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தை ஜேம்ஸ் கேமரூன் திரைப்படமாகவும் திரையிட்டார்.
இதற்காக சு.ஆ.ளு நிறுவனம் மாசாசூசெட்சை சேர்ந்த உட்ஸ் ஹோல் ஓஷனோகிராபிக் இன்ஸ்டிடியுஷன் நிறுவனத்துடன் இணைந்து டைட்டானிக் மூழ்கிய பகுதிக்கு நிபுணர் குழுவை அனுப்ப இருக்கிறது.இந்த குழு கனடாவின் நியுபவுண்ட்லேண்ட் மாநிலம் செயின்ட் ஜான்ஸ் நகரிலிருந்து அடுத்த மாதம் 18ம் திகதி புறப்படுகிறது.விஞ்ஞானி டேவிட் கல்லோ தலைமையில் செல்லும் இந்த குழுவில் மொத்தம் 20பேர் இடம் பெறுகின்றனர். ஆர்வி ஜீன் சார்கன் என்ற 250 அடி நீள கப்பலில் செல்லும் இவர்கள் 20 நாட்கள் கடலுக்குள் இருந்தபடி நவீன சோனார் கருவிகளை கொண்டு படமெடுக்க உள்ளனர்.
0 comments:
Post a Comment