தமிழிஷ் இன்ட்லியுடன் இணைந்தது என்று தலைப்போடு வருது எங்கட புதிய திரட்டியான இன்ட்லி தளம்.ஒன்னுமே புரியல என்ன பண்ணனும் ஏது பண்ணனுமென்று தளத்துக்க நுளைந்ததும்….
எங்கயோ ஒரு வேற்று கிரகத்துக்கு வந்தமாதிரி ஒரு அனுபவம்.
புதிதாக பதிவுலகத்துக்கு வருகின்றவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
இன்ட்லில நான் கண்ட குறைபாடுகள்
எங்கட பதிவுகள் பிரபலமடைவதே வாசகர்கள் போடுற பொன்னான வாக்குகள் மூலம்தான். வாக்கு போடுறாங்க ஆன அந்த வாக்க போட்ட நபர் யார் என்று பாக்க முடியலயே…..
யாருக்கும் தெரிஞ்சா எனக்கு ஒருக்கா சொல்லுங்கோ…
அடுத்த குறைபாடு..
தளம் பிரபலமடைவது தளத்துக்கு வரும் பார்வையாளர்களை பொருத்துதான்.
அதிகமான வாசகர்களுக்கு பழகி போன திரட்டி தமிழிஷ்.இப்போ புதிய தளத்துடன் தமிழிஷ் இணைந்து இருப்பதால் பார்வையாளர்களின் வருகையும் குறைஞ்சு போச்சு…
இப்போ எங்கட தளம் ஆட்கள் இல்லாம காய்யிது.
தமிழர்களின் விருப்பம் ????
வேற ஏதாவது குறைபாடு இருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்கோ
4 comments:
இப்பொழுதுதான் இணைந்திருக்கிறது என்பதால், ஆரம்ப கால குறைபாடுகள் என்று நினைக்கின்றேன். விரைவில் எல்லா குறைகளும் சரி செய்யப்படும் என்று தோன்றுகிறது. மற்றபடி, தமிழிஷ் தளத்திற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. Votes has been changed to Likes. Instead of who voted, who liked tab is there.
ஆமா இப்போ ஓட்டு போடுவது ரொம்ப நேரம் எடுத்து கொள்கிறது
///எங்கட பதிவுகள் பிரபலமடைவதே வாசகர்கள் போடுற பொன்னான வாக்குகள் மூலம்தான். வாக்கு போடுறாங்க ஆன அந்த வாக்க போட்ட நபர் யார் என்று பாக்க முடியலயே…..///
திலீபன்,
இதை ஒரு குறைபாடாகச் சொல்ல முடியாது. தமிழீஷில் பதிவு வெளிவந்து 30 வினாடிக்கும் குறைவாக இரண்டு மூண்று ஓட்டுக்கள் விழுந்த சம்பவங்கள் ஏராளம். பல பதிவர்கள் இதனைக் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள். இப்படி வாக்களிக்கிறவர்களின் நோக்கம் பதிலுக்கு நாமும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே அன்றி வேறில்லை. இந்த போக்கு ஒழிந்து போனால் தரமான பதிவுகள் மட்டுமே பிரபல பதிவுகள் பட்டியலில் வரும். ஆகவே இது வரவேற்கத்தக்க மாற்றமே.
நன்றி நண்பர்களே
இருக்கும் குறைகளை நிவர்த்தி பண்ணுவார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்து விடைபெறுபவர் உங்கள் அன்பின் டிலீப்
(ஒவரா போச்சோ)
Post a Comment