டிஜிட்டல் கேமராக்கள் வந்த பின்னர், சிறுவர்கள் கூட இப்போது போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் போட்டோ எடுப்பது குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக இல்லாமல் போட்டோ எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. இதற்கான தளம் ஒன்று இணையத்தில் உள்ளது. இதன் முகவரி http://www.betterphoto.com/home-rc2010.asp இந்த தளத்தில் நுழைந்தவுடன் மிக எளிய முறையில் டிப்ஸ்கள் தரப்படுவதனைக் காணலாம்.
பல வகையான போட்டோக்களைக் காட்டியே, இளைஞர்களுக்கு போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் மனதில் பதிய வைக்கப்படுகின்றன. குறிப்புகள் அதிகமாக தொழில் நுட்ப ரீதியாக இல்லாமல், எளிமையாக இருப்பதுவும் இவற்றின் சிறப்பாகும்.
வேடிக்கையான போட்டோக்களை எப்படி எடுப்பது என்று காட்டுவதன் மூலம், பார்ப்பவர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு, தகவல்கள் தரப்படுவது இந்த தளத்தின் இன்னொரு சிறப்பாகும். கேள்வி பதில் பகுதியில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாக்கப் படுகின்றன. நீங்கள் போட்டோ எடுப்பது குறித்து அறிய விரும்பவில்லை என்றாலும்,
இதில் உள்ள ஆர்வம் ஊட்டும் தகவல்களுக் காகவும், சிறப்பாக எடுக்கப் பட்ட போட்டோக்களுக்கா கவும், இந்த தளத்தினைப் பார்வையிடலாம்.
4 comments:
THANKS
தமிழில் உள்ளதையும் பாருங்க
http://photography-in-tamil.blogspot.com/
ThanQ
நன்றி உங்கள் தகவலுக்கு Anonymous
நன்றி ARAN & Mathan
Post a Comment