"பிசிடே' என்ற பறவையின குடும்பத்தை சேர்ந்த எட்டு வகை மரங்கொத்தி பறவைகளும் அடங்கும்.
மரப்பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு, வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக, இவை மரங்களை கொத்துகின்றன. மரத்தில் பொந்து ஏற்படுத்தி குடியிருக்கின்றன. "பொன் முதுகு' மரங்கொத்தி பறவைகள் குன்னூர், கொலக்கம்பை, பர்லியார், ஆடர்லி வனப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. பொன் முதுகு பறவைகள், மரங்களை கொத்தும் வேகம் வியப்பூட்டுவதாக இருக்கும்.
மரங்கொத்தி பறவைகளின் கண்கள், எலும்பு, திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றிற்கு எவ்வித அதிர்வோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. பறவை கண் விழிகளின் மேல், இமையை திறந்து மூடும் வகையில் அமைந்துள்ள ஒரு படலம், இப்பறவைகள் மரங்களை கொத்தும்போது தெறிக்கும் மரச்சிராய், மரத்துகள்களில் இருந்து அவற்றின் கண்களை பாதுகாக்கின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி, வேதனை, பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்களின் உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன.
2 comments:
Hi,
Good info.
But suggestion, turn off the radio control in the blog. because most of the leisure time only we browse while hearing music in the head set. If you put it is like irritating and force to bounce back from the server. Because searching the radio and stop is little tough.
Thanks
Suresh M
அருமை
Post a Comment