அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

முத்தையா முரளிதரன் - Living Legend

Muttiah Muralitharan is carried off the field by Kumar Sangakkara and Dammika Prasad

இன்றைய நாள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தினமாய் இருக்குமென்று நினைக்கின்றேன்.
சுழல் மன்னன் முரளிய கடைசியாக கிரவுன்டுல காண்கின்ற படியா…..








முரளிதரன் இன்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


இன்று நடந்த ஆட்டம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்குமென்ரே நினைக்கிறன்.




முரளியின் கடந்த காலங்கள் மற்றும் அவரின் சாதனைகள் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறன்.


சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலை, கண்டியில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். 
முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 
1990 மற்றும் 1991ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்

A giant hoarding of Muttiah Muralitharan in Galle's city center


இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில்விளையாடினார்.



முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக் நிகழ்த்தியுள்ளார்:
  • தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1155 இலக்குகள் ஜூலை 14 2007இன் படி)
  • தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர் (20).
  • தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 5 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60) 
  • ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் 9 இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
  • தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். 
  • தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். 
  • வேகமான 350, 400, 450, 500, 550, 600, 650 மற்றும் 700 தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
  • நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.
  • தேர்வு துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153) 
  • அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(75) 
Muttiah Muralitharan was stuck on 799 wickets for a long time

விக்கெட் சாதனை மைல்கல்கள்

1stCraig McDermott lbw 9 vs Australia - Match #1 - Test #1195
50thNavjot Sidhu caught Ruwan Kalpage 43 vs India - Match #13 - Test #1247
100thStephen Fleming bowled 59 vs New Zealand - Match #27 - 1359
150thGuy Whittall caught sub (Mahela Jayawardene) 17 vs Zimbabwe - Match #36 - Test #1395
200thDominic Cork caught Romesh Kaluwitharana 8 vs England - Match #42 - Test #1423
250thNaved Ashraf lbw 27 vs Pakistan - Match #51 - Test #1489
300thShaun Pollock caught Tillakaratne Dilshan 11 vs SouthAfrica - Match #58 - Test #1526
350thMohammad Sharif caught and bowled 19 vs Bangladesh - Match #66 - Test #1561
400thHenry Olonga bowled 0 vs Zimbabwe - Match #72 - Test #1585
450thDaryl Tuffey caught Sanath Jayasuriya 1 vs NewZealand - Match #80 - Test #1644
500thMichael Kasprowicz bowled 0 vs Australia - Match #87 - Test #1688
520thMluleki Nkala caught Mahela Jayawardena 24 vs Zimbabwe - Match #89 - Test #1698 - Breaks CourtneyWalsh's world record
550thKhaled Mashud caught Thilan Samaraweera 2 vs Bangladesh - Match #94 - Test #1764
600thKhaled Mashud caught Lasith Malinga 6 vs Bangladesh - Match #101 - Test #1786
650thMakhaya Ntini caught Farveez Maharoof 13 vs South Africa - Match #108 - Test #1812
700thSyed Rasel caught Farveez Maharoof 4 vs Bangladesh - Match #113 - Test #1839
709thPaul Collingwood bowled 45 vs England - Match #116 - Test #1851 - Breaks Shane Warne's world record
750thSourav Ganguly - vs India, July 2008

800th 
PP Ojha - vs India,July 2010

அதிக விக்கெட் எடுத்தவர்கள்








BBC graphic


அணிகளுடனான 800 விக்கெட் பகிர்வு




112 v England (in 16 Tests)
105 v India (in 22)
104 v South Africa (in 15)
89 v Bangladesh (in 11)
87 v Zimbabwe (in 14)
82 v New Zealand (in 14)
82 v West Indies (in 12)
80 v Pakistan (in 16)
59 v Australia (in 13)









































































































































Muttiah Muralitharan poses with his wife Madhimalar

You are a legend... A Living legend...

Post Comment


1 comments:

nis said...

nice to see the whole history of murali

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.