மிக அதிக அளவு சிகரெட் குடிப்பதால், இதயத்தின் தோற்றம் மாறி சுருங்கும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிகாகோவின் இலியானோஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
அதிக அளவில் சிகரெட் புகைப்பதால் நோர்பைன்ப்ரைன் எனும் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து, இதயத்தில் சுரப்பியையும் ஊக்குவிப்பதுடன் இடது வென்டிரிக்கிளின் வடிவத்தை மாற்றிவிடக் கூடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சுமார் 5 வார காலம் ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள் சிகரெட்டின் புகையால் மிட்டோஜென் சுரப்பியால் ஏற்படும் செல் வளர்ச்சி இதயத் தசைகளில் உருமாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று தெரிய வந்துள்ளது.
சிகரெட் புகையால் சுரக்கும் சுரப்பியானது இதயத்தில் காயம் உருவாக்கக் கூடியது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
சிகரெட் புகையில் காணப்படும் நிகோடினால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே நீண்ட காலம் இதய பாதிப்பின்றி வாழ வேண்டுமா? இப்போதே சிகரெட் புகைப்பதை நிறுத்தி விடுங்கள்.
----------------------------------------------------------------
பயோ-டேட்டா (சிகரெட்)
கருத்து படம்?
சிகரெட் பிடிப்பவர்கள்..? தங்களின் உடல் நலத்தையும் கெடுத்து.. அடுத்தவரின் நிம்மதியையும்
கெடுகிறார்கள் இவர்களை என்ன செய்வது?
0 comments:
Post a Comment