தமக்குச் சமமாக அல்லது தமக்கு ஒருபடி கீழாக இருக்கும் ஆண்களை விடத் தாம் அந்தப் பதவியில்அமர்வதற்கு எந்த வகை யில் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நிரூபிப்பது அவர்களின்கடமையாக எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்குச் சில விதிவிலக்கு கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் பெரும்பான்மையானவேளைகளில் சந்தர்ப் பமும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிரா னதாகவே அமைந்துவிடுகின்றன.
தாம் பெண்கள் என்பதால் தமக்குச் சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெண் கள் எதிர்பார்ப்பதில்லை.ஆண்களை நிறுக் கும் அதே தராசுத்தட்டில் அதே எடையுடன் தம்மையும் நிறுக்க வேண்டும் என்றேஎதிர்பார்க்கிறார்கள்..
குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை படைத்தவர்கள் என்று ஏற் றுக்கொண்டு, அந்தப் பளுவைஅவர்களிடம் பலவந்தமாகத் திணிக் கத் தெரிந்த எமது சமூகத்திற்கு அதே திறமையின் மூலம் அவர்கள்வெளியிடங்களில் முன்னேறுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளத் திராணி யில்லை என்றே தோன்றுகிறது.
இன்று நாம் காணவிருக்கும் பெண், இந்த நூற்றாண்டுக்குச் சொந்தமானவரல்லர். காலம், நமக் காகவிட்டுச் சென்ற பல சரித்திரப் பெருமைகளைத் தமக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மறைந்து போனமாமனிதர்களில் ஒருவர். இவர் பெயர் கதம்பினிகங்குலி.
1861ஆம் ஆண்டு, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பிறந்தவர்.
கலா சாரம் கிடுக்கிப்பிடி போட்டிருந்த அந்தக் காலத்திலேயே இந்தியப் பெண்களுக்கான சமுதாயவிழிப்பு உணர்ச்சிக்கான பெண்களின் விடு தலை கோரும் அமைப்பை 1893 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர்இவர்..
1878ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழக நுழைமுகப் பரீட்சையில் சித்தியடைந்த முதல்பெண்மணி என்னும் சிறப்பும் இவரையே சாரும்.
1883ஆம் ஆண்டு பட்டதாரியானதன் மூலம் இவரும் இவருடைய தோழியான சந்திரமுகி பாசுஎன்பவரும் இந்தியாவில் மட்டுமன்றி, அப்போதைய பெரிய பிரித்தானிய ராஜ்ஜியத்தின் கீழ் வந்தஅத்தனை நாடுகளுக்குள்ளேயும் பட்டம் பெற்ற முதல் பெண் கள் என்ற பெருமையையும் தமதாக்கிக்கொண்டனர்.
தொடர்ந்து, மருத்துவத் துறையில் நுழைந்த இவர், 1886இல் கொல்கத்தா சர்வ கலாசாலையின்மருத்துவப் பட்டதாரியான தன் மூலம், இந்தியாவில் மேலைநாட்டு மருத்துவத்தைக் கையாளக்கூடியமுதல்பெண்மருத்துவர் என்ற பெருமையையும் தேடிக் கொண்டார். அவரது பெருமைகளைஇலகுவாகச் சொல்லிவிடலாம்.
ஆனால் இவர் அந்தப் பெருமைகளை அடைவதற்காகப் பல எதிர்ப் புகளைச் சந்தித்தார்.
பெண்களை அடக்கியாள வேண்டும் என்னும் மனப்பான்மையில் ஊறிப்போயிருந்த சமூகக்கலாச்சாரத்தில் மிகவும் கடினமாக, எதிர்நீச்சலடித்தே தன்னை முன்னேற்றிக்கொள்ளவேண்டியிருந்தது..
1883ஆம் ஆண்டு தன் சமகாலத்துச் சமூக சீர்திருத்தவாதியான டவர்காந்த் கங்குலியை மணம்செய்துகொண்டார்.
சமூகத்தின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1892ஆம் ஆண்டு இவர் இங்கிலாந்துக்குப் பயணித்துஅங்கு ஃகீஇO, ஃகீஇகு, எஊககு என்னும் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுச் சில ஆண்டுகளின் பின்னால்இந்தியா திரும்பினார்.
இவருக்கிருந்த ஒரே பலம், சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளைக் கொண்டிருந்த இவரது கணவரின்அசைக்கமுடியாத ஆதரவு தான்.
எவ்வளவு எதிர்ப்பு சமுதாயத்தில் இருந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆத ரவு இருந்தால் வாழ்வில்முன்னேறுவது சுலபம் என்பதை இவரின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.
அதுமட்டுமல்ல. அந்நாளைய கலாசாரக் கெடுபிடியிலும் பெண்களுக்கான முன்னேற்றச் சிந்தனைகொண்டிருந்த ஆண்களின் பங்களிப்பும் தெரிகிறது..
இவருடைய சமுதாய முன்னேற்ற நட வடிக்கைகள் கல்விக்குப் பின்தங்கவில்லை.
இந்திய நிலக்கரிப் பெண் தொழிலாளர்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்கான அமைப்பைத்தோற்றுவித்து அதற்காகப் பாடுபட்டார்.
இந்தியப் பெண் சமுதாயத்தின் விடுதலைக்காகக் குரலெழுப்பினார்.
அந்நாளில் இந்தியத் தொழிலாளர் தென்னாபிரிக்காவில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்துக்குஆதரவாகக் குரலெழுப்பினார்.
1889ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங் கிரஸின் ஐந்தாவது அமர்வில் பங்குபற்றிய ஆறு பெண்களில்இவரும் ஒருவர்.
1914 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களை கௌரவிப்பதற்காக கொல்கத்தாவில் நடை பெற்றமாநாட்டுக்கு இவர் தலைமை வகித் தார் என்பது இவரது பெருமைக் கிரீடத்தின் மணி!
இத்தனை பெருமைகளைக் கொண்ட இவரின் இன்னொரு நெகிழ்ச்சியான விடயம் என்ன தெரியுமா?
இத்தனை சமுதாய சமூகப் பணிகளுக்கு மத்தியில் எட்டுக் குழந்தைக ளின் பாசமிக்க தாயாக, ஒருஅருமையான குடும்பத் தலைவியாகவும் திகழ்ந்தார் என்பதே!.
பெண்களின் திறமையைக் குறைவாக மதிப்பிடும் எண்ணங்கொண்ட அனைவருக் கும், பொதுவாழ்வில்,சமுதாயப் பணிகளில் முன்னிற்கும் பெண்கள் தம் குடும்பப் பணி களை ஓரங்கட்டிவிடுவார்கள் என்னும்எண் ணம் கொண்டவர்களுக்கும் இது ஒரு சாட்யடி!.
0 comments:
Post a Comment